Saturday, December 31, 2011
2011 -க்கு வழியனுப்புதல்
இன்னும் சில மணி நேரத்தில் இந்த வருடம் முழுமை பெற்று புதிய வருடம் பிறக்க போகின்றது. அதற்குள் 2011 - ஒரு கண்ணோட்டம்.
பொதுவாகவே இந்த 2011 வருடம் சிறப்பாகவே அமையவில்லை. அட எனக்கும் மட்டும்தான் அப்படியானு பாத்தா, பல பேர்க்கும் அப்படிதான். போன New Year Celebrations இருந்தே இந்த problem start ஆகிடுச்சு. ஆமா, friends யாருமே இல்லாம தனியா ஒரே ஒரு BEER மட்டும் வச்சுட்டுதான் celebrate பண்ணினேன். அதுனாலையோ என்னவோ இந்த வருசத்துல நெறைய விசயங்கள்ல தனியவேதான் இருந்தேன்.
Business நல்ல போச்சுன்னு சொல்ல முடியாது, ஆனா என்னால என்னோட vendors யாருக்கும் எந்த நஷ்டமும் இல்ல. அதும் இந்த BPO Field -la Fake Projects கிட்ட இருந்து தப்பிச்சு நானும் safe ஆகி என்னோட vendors யும் safe பண்றதுகுள்ள தாவு தீர்ந்து போச்சு. சந்தோஷமான விஷயம் என்னன்னா, இந்த வருசத்துல Projects sign பண்ணின எல்லா vendors உம் Client கிட்ட bill வாங்கிட்டு Happy ah இருக்காங்க. ஒரு IT and BPO Consultant கு இதைவிட வேற என்ன வேணும்.
But, Middle Year-la எந்த projects sign-up இல்லாததால, ரொம்பவே சிரமமா போச்சு. இதுல ஒரு தோழிக்கு கல்யாணம். அதுக்கும் போக முடியல. அதுனாலயே இப்போ எங்களுக்குள்ள எந்த Contact உம் இல்ல. பொதுவாவே கல்யாணத்துக்கு அப்புறம் தோழிகள்கிட்ட கொஞ்சம் distance maintain பண்றது நல்லதுதான். (எல்லாம் ஒரு அனுபவம் தான்). எப்படியோ ஒரு வழியா வீட்டுல பைசா வாங்கி
life ah RUN பண்ணினேன்.ரொம்ப மோசமான காலகட்டம் அது.
இந்த வருசத்துல Social Networks-la ஒரு standard position-ku வரமுடிஞ்சது. Blogger, Facebook, Twitter and Google+. 2008 ல இருந்தே Blogger Account இருந்தாலும், இந்த வருஷம் தான் proper ah blogs பண்ண ஆரம்பிச்சேன். ஒரு பக்கம் Facebook la business Promote பண்ணினாலும், நெறைய புது friends கிடைச்சாங்க.
அது மாதிரிதான் Twitter உம். நெறைய தமிழ் கீச்சர்கள் (அதாங்க twitters) அறிமுகம் கிடைச்சது. குறிப்பா சொல்லனும்னா, @iamkarki, @iparisal, @அதிஷா, @manosenthil, @kuumuttai, @isr_selva, @soniarun, @senthilcp, @erodekathir இப்படி நெறைய நண்பர்கள் அறிமுகம் கிடைச்சது.
Bloggers la Jackiesekar அண்ணாவோட நட்பு கிடைச்சது இந்த வருசத்தோட Gift nu சொல்லலாம்.
சங்கமம் 2011 :
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் நடத்திய தமிழக அளவிலான Bloggers, Facebookers and Twitters meet up. நானும் கலந்து கொண்டேன். அதில் ஈரோடு bloggers and Twitters சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சுது. அங்க தான் Jackie அண்ணனை சந்திக்கும் வாய்ப்பும் கிடைச்சது. அது ஒரு நல்ல அனுபவம்.
Year End la, ஒரு Business sign-up ஆச்சு, சபரி மலைக்கு மாலை போடலாம்னு இருந்தேன். அது முடியல, so, ஸ்ரீ ராகவேந்திரர்க்கு Dec 21 மாலை போட்டுட்டேன் . Life la first time மாலை போடறேன். மனசு சந்தோசமா இருந்துச்சு.
Dec 26 எனக்கு பிறந்த நாள், மாலை போட்டதால வழக்கமான celebration பண்ண முடியல. Friends தான் ரொம்ப feel பண்ணினாங்க.
Dec 27 to Dec 30 வரை திருப்பதி மாமா familyoda போயிருந்தேன். After long time Long Travel. நல்லா இருந்துச்சு. இதோ இன்னைக்கு இங்க இந்த பதிவு எழுதிட்டு இருக்கேன்.
எப்படியோ 2011 முழுமை அடைய போகிறது. இனிமேலே வரும் 2012 அனைவருக்கும் நல்லா பயனுள்ள ஆண்டாக அமைய இந்த இனிய தருணத்தில் வாழ்த்துகிறேன்.அதே நேரத்தில், இந்திய மற்றும் தமிழக ஆட்சியாளர்களுக்கு நல்லா புத்தியை தருமாறும் எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன்,
தம்பி@ரமேஷ்
Monday, December 26, 2011
அறிமுகம்
பல்சர்காரன், இன்று முதல் இதுதான் எனது வலைப்பதிவு. அதென்ன, "பல்சர்காரன்"!! ஏதோ, மக்களின் "பல்சரை" பிடித்து பார்ப்பவன் என்று தவறாக நினைக்க வேண்டாம். எனக்கு Bajaj Pulsar Bike ரொம்ப பிடிக்கும். அதுதான் இதன் பெயர்க்காரணம்.(மனசுல "பொல்லாதவன்" னு நெனப்பெல்லாம் ஒன்னும்மில்லைங்கோ!!)
இன்று இந்த வலைபக்கத்தை தொடங்குவதற்கும் ஒரு காரணம் உண்டு. அது வேற ஒன்னுமில்லைங்க, இன்னிக்கி இந்த பல்சர்காரனுக்கு பொறந்த நாளு, அதா எதாவது உருப்படியா செய்யல்லம்முனு, இதை ஆரம்பிச்சுருக்கேன்.
எப்படி "Pulsar" எல்லா சந்து பொந்து, இண்டு இடுக்கு போய் வருதோ, அதேபோலவே, நாமளும் எல்லாத்தையும் சும்மா ஜாலியா அலசி ஆராய்வோம் வாங்க.
Subscribe to:
Comments (Atom)
